Thursday, 13 May 2010

அழகுக் குறிப்புகள்!!

இந்த தடவை குறிப்பு முத்துக்களில் ‘அழகுக் குறிப்புகளை’க் கொடுக்கலாமென்று தோன்றியது. பெண்களுக்கான குறிப்புகள் மட்டும் அல்ல இவை. ஆண்களும் இவற்றைப் பின்பற்றலாம்.


1. தலை முடி வளர:

அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.

2. வளமான தலைமுடிக்கு:

தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய்
எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி
நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும். இது முடி கொட்டுவதையும்
நிறுத்தும்.

3. முடி கொட்டுவது நிற்க:

ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை குளித்து வரவும்.

4. கண்கள் கீழுள்ள கருவளையங்களைப் போக்க:

அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

5. பாத வெடிப்பு:

தொடர்ந்து கடுகெண்ணெயைத் தடவி வந்தால் சரியாகி விடும்.

6. தலையில் ஏற்படும் வழுக்கை, சொட்டை முதலியவை நீங்க:

தாமரைஇலைகளைப் பறித்து சாறெடுத்துக்கொள்ளவும். அதற்கு
சமமான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவும். நீர்ப்பசை நீங்கி
தைலம் மேலே மிதக்கத் தொடங்கியதும் ஆறவிட்டு பத்திரப்படுத்தவும்.
இதை தினமும் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்கு வளரும்.

7. முகப்பொலிவிற்கும் அழகிற்கும் ஒரு face pack!

தேவையான பொருள்கள்:

பாசிப்பயிறு- 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள்- 100 கிராம்
கசகசா- 10 கிராம்
உலர்ந்த ரோஜா மொட்டு- 5 கிராம்
பூலாங்கிழங்கு- 5 கிராம்
எலுமிச்சை இலை, வேப்பிலை, துளசி இலை மூன்றும் 2 கிராம்.


மொத்தமாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகம் கழுத்தில் தடவி வந்தால்
மாசு மருவற்ற முகம் கிடைப்பதுடன் நிறமும் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும். இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் உபயோகிக்கலாம்.

24 comments:

  1. சூப்பரான அழகு முத்துகள்

    ReplyDelete
  2. டிப்ஸ் ஈசியாக கிடைக்கிற பொருள் வைத்து என்பதால் பின்பற்ற வசதி.நன்றி மனோ அக்கா.

    ReplyDelete
  3. சூப்பரான டிப்ஸ்...அருமை...

    ReplyDelete
  4. அருமையான குறிப்புக்கள் மனோ அக்கா. முகத்துக்கு சொன்னது மிக நல்ல குறிப்பு. ஆனால் பூலாங்கிழங்கென்றால் என்னவெனத் தெரியவில்லை. நான் கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
  5. அருமையான குறிப்புக்கள்....

    ReplyDelete
  6. பயன் உள்ள அழகுக்குறிப்புகள்.ஆனால் பூலாங்கிழங்கு தான் எனக்கும் என்ன என்று விளங்கவில்லை..

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி ஜலீலா!

    ReplyDelete
  8. பதிவுக்கு என் அன்பு நன்றி, இமா!

    ReplyDelete
  9. அன்புப் பதிவிற்கு என் உளமார்ந்த நன்றி, ஆசியா!

    ReplyDelete
  10. அன்புப் பதிவிற்கு என் உளமார்ந்த நன்றி, ஆசியா!

    ReplyDelete
  11. பாராட்டிற்கு என் அன்பு நன்றி, கீதா!

    ReplyDelete
  12. அதிரா, பாராட்டுக்கு என் அன்பு நன்றி!

    தமிழ் நாட்டில் எல்லா ஊர்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் பூலாங்கிழங்கு கிடைக்கும், சிறியதாக வெள்ளை நிறத்தில் சில வேர்களுடன் இருக்கும். நன்கு சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.

    ReplyDelete
  13. அருமையான குறிப்புக்கள்..!

    ReplyDelete
  14. முதல் வருகைக்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி, சங்கவி!

    ReplyDelete
  15. வருகைக்கு என் அன்பு நன்றி, ஜெயா!

    அதிராவிற்கு நான் சொன்னது போல இந்த பூலாங்கிழங்கு மற்றும் அனைத்து மருந்து பொருள்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    ReplyDelete
  16. அன்புள்ள குமார் அவர்களுக்கு!

    பாராட்டுக்கு என் அன்பு நன்றி!

    ReplyDelete
  17. யாருக்கு பயன்படுதோ இல்லையோ அமீரகத்துல இருக்கிறவங்களுக்கு ரொம்ப யூஸ் ஆகும் . அதிலும் ஷார்ஜா , துபாய் தண்ணீ ரொம்ப மோசம். குளித்தாலும் முடி கொட்டும். குளிக்காட்டியும் முடி கொட்டும்

    :-))))))))))))))))))))))))

    ReplyDelete
  18. Superb tips.. Thanks Mam!

    ReplyDelete
  19. அன்புள்ள ஜெய்லானி அவர்களுக்கு!

    உங்கள் பதிவு சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அதுதான் உண்மையும்கூட! ஷார்ஜா தண்ணீர் உபயோகித்து வருவதால் முடி கொட்டாமலிருக்க இதை மாதிரி ஏதாவதுதான் செய்து பார்க்க வேண்டியிருக்கிறது!

    ReplyDelete
  20. உபயோகமான குறிப்புகள்... மிக்க நன்றி அக்கா..

    ReplyDelete
  21. அன்பான பதிவிற்கு நன்றி, இர்ஷாத்!

    ReplyDelete
  22. Thanks a lot for the nice compliment, Krishnaveni!!

    ReplyDelete